இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

படம்
அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலடியாக கடந்த ஏப்ரலில் அவர் சமர்சீர் வரி விகிதத்தை அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை https://ift.tt/S3YdZl9

படம்
போபால் : இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளை முன்னிட்டு 'மகிளா சக்திகரன் மகா சம்மேளனம்' என்ற பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நமது அப்பாவி மக்களை ரத்தம் மட்டும் சிந்த வைக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிரிக்க முயன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு சவால் விடுத்தனர். இந்த சவாலே தீவிரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அழிவாக மாறிவிட்டது. அவர்கள் தொடர்ந்த தாக்குதலால், தங்களுக்கு தாங்களே சாவுமணி அடித்துக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா! | Miss World 2025

படம்
ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகி அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் மக்களின் இழப்பை அரசு வேலை ஈடு செய்யாது: அமித் ஷா உருக்கம் https://ift.tt/yIt3OAE

படம்
புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகள் அவர்களின் இழப்பை ஒருபோதும் ஈடு செய்யாது என்பது எனக்கு தெளிவாக தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பதிலடியை வழங்கியது. இந்த வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையான பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 17 பெண்கள் முதல் முறையாக பட்டம் பெற்றனர் https://ift.tt/oNvdTgR

படம்
புதுடெல்லி: வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக, என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் 75 ஆண்டுகால செயல்பாட்டில் முதல்முறையாக 17 பெண்கள் பட்டம்பெற்று சாதனை படைத்துள்ளனர். என்டிஏ-வில் கடுமையான பயிற்சிகளைப் பெற்று ஆண்கள் மட்டுமே பட்டங்களைப் பெற்றுவந்தனர். இந்த நிலையில், பெண்களையும் அந்த அகாடமியில் அனுமதிக்க கோரி கடந்த 2021-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, யுபிஐஎஸ்சி தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயில்வதற்கு முதல் முறையாக பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொழிலதிபரிடம் ரூ.5 கோடி லஞ்சம்: அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்தது சிபிஐ https://ift.tt/uZQI4PJ

படம்
ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் தேன்கனலை சேர்ந்தவர் ரதிகாந்த ரூட். இவர் சுரங்கம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னிடம் லஞ்சம் கேட்பதாக கூறி சிபிஐ-யிடம் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் https://ift.tt/C5urs8c

படம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) 2025 உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு ஈரான் எச்சரிக்கை

படம்
இந்தியர்கள் 3 பேர் ஈரானில் கடத்தப்பட்ட விவகாரத்தையடுத்து, சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் இந்தியர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த ஹுசன்ப்ரீத் சிங், ஜஸ்பல் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் உள்ளூர் ஏஜென்ட் மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர். துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக ஏஜென்ட் உறுதியளித்துள்ளார். இதையடுத்து கடந்த 1-ம் தேதி ஈரான் சென்ற இந்த 3 பேரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று அவர்கள் குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி பணம் கேட்கிறது. கடத்தப்பட்டவர்களின் கைகள் கட்டப்பட்டு உடலில் காயங்கள் இருக்கும் படங்கள், வீடியோக்கள் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடத்தப்பட்டவர்கள் சில நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். கடந்த 11-ம் தேதிக்குப்பின் இவர்கள் தொடர்பில் இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக நாடுகள் மீதான வரிவிதிப்பு: ட்ரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தடை - பின்னணி என்ன?

படம்
உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். குறிப்பாக, வர்த்தக மோதலில் ஈடுபட்ட சீனாவுக்கு 145 சதவீதம் வரை வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதனிடையே, வர்த்தகம் தொடர்பாக பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக சீனாவை தவிர, மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 3 மாத காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு https://ift.tt/0GZSXub

படம்
காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே உள்ள கே. கங்கவரம் மண்டலம், ஷெரிலங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த செவ்வாய் கிழமை பலர் கலந்து கொண்டனர். மதிய உணவுக்கு பின்னர், இதில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த காக்கிநாடா, மந்தவேடு, போலாவரம் பகுதிகளை சேர்ந்த 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் அதே பகுதியில் உள்ள கவுதமி கோதாவரி ஆற்றில் நீச்சல் பழக சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு https://ift.tt/hRecJaO

படம்
புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்னாள் செபி தலைவர் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறியுள்ளது. தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜவஹர்லால் நேரு 61-வது நினைவு தினம்: ராகுல் காந்தி புகழஞ்சலி https://ift.tt/7UPGQFb

படம்
புதுடெல்லி: ‘‘சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு’’ என அவரது 61-வது நினைவு தினத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அவர் இறக்கும் வரை 16 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்தார். அவரது 61-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது: ஷெபாஸ் ஷெரீப்

படம்
இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் https://ift.tt/9kTA8sz

படம்
புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழில​திபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன. கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், பொது விவ​காரங்​கள், குடிமைப் பணி மற்​றும் சமூக சேவை உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்​தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema,...

தொடக்கத்திலேயே தீவிரம் அடைகிறது தென்மேற்கு பருவமழை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு ‘ரெட் அலர்ட்’ https://ift.tt/bczZsDO

படம்
புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக, கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. அடுத்த நாளே பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த டெல்லி நீதிமன்றம்! https://ift.tt/Xqy3H4p

படம்
புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். காவல் துறையின் பரிந்துரையின் பேரில் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீஸாரின் பிஆர்ஓ, “மைனர் மல்யுத்த வீராங்கனை அளித்த புகாருக்கு உறுதியான ஆதாரம் இல்லை. அவரும் அவரது தந்தையும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளோம். இதனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்” என நீதிமன்றத்தில் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் https://ift.tt/QpcnhTe

படம்
ஆபரேஷன் சிந்தூரால் இந்தியர்களின் தலைநிமிர்ந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 122-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? - முழு விவரம் https://ift.tt/eGuvfqX

படம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, கோவா, டெல்லி, ஹரியானா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, பிஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையை சேர்ந்த இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு

படம்
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடந்த லாட்டரியில் சுமார் ரூ.230 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாட்டில் டைகெரோஸ் நிறுவனம் எமிரேட்ஸ் டிரா என்ற லாட்டரியை நடத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற மெகா 7 கேம் என்ற லாட்டரி குலுக்கலை இந்த நிறுவனம் நடத்தியது. இதில் சென்னையைச் சேர்ந்த, இன்ஜினீயரான ஸ்ரீராம் ராஜகோபாலன் கலந்துகொண்டு முதல் பரிசான சுமார் ரூ.230 கோடியை (2.7 கோடி அமெரிக்க டாலர்கள்) வென்றுள்ளார். இது ஆன்-லைனில் விளையாடும் லாட்டரி விளையாட்டாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பெண்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து https://ift.tt/aPIS48E

படம்
மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகள், தொலைநோக்கு திட்டங்களை இந்த அமைப்பு வரையறுக்கிறது. இதன் தலைவராக பிரதமர் பதவி வகிக்கிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர், துணைத் தலைவராக செயல்படுவார். உலக வங்கியில் 28 ஆண்டுகள் பணியாற்றிய சுமன் பெரி தற்போது நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோத சூதாட்ட செயலிகள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் https://ift.tt/wyDvmUZ

படம்
புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலிகளை தடை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரி பொது நலன் மனுவை (பிஐஎல்) தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம்: பாஜக அறிவிப்புக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு https://ift.tt/ElXJgzW

படம்
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் படங்கள் விரைவில் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனக் கூறினார். இதற்கான முடிவுகடந்த மே 21-ல் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பொது நோக்கக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த மூன்று படங்களில் இடம்பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவத்தினருக்கான வீரதீர விருது: குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார் https://ift.tt/xqP84i0

படம்
புதுடெல்லி: நாட்டை பாதுகாக்கும் பணியில் வீர தீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று விருதுகளை வழங்கினார். பாதுகாப்பு படையினருக்கான வீர தீர விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 26 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு சவுரியா சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறியுள்ளது: உச்ச நீதிமன்றம் கண்டனம் - முழு விவரம் https://ift.tt/u2ihOde

படம்
புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியதன்மூலம் கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு அமலாக்க துறை இதுகுறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. டாஸ்மாக் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறுவதாக கூறி, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மர்மமான முறையில் படுகாயம் அடைந்த ‘லஷ்கர்’ முக்கிய தீவிரவாதி மருத்துவமனையில் அனுமதி

படம்
இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பாவின் இணை நிறுவனரும், லஷ்கர் பத்திரிகைகளின் ஆசிரியருமான அமீர் ஹம்சா (66) அவரது வீட்டில் மர்மமான முறையில் படுகாயம் அடைந்து லாகூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹம்சா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தற்போது ஐஎஸ்ஐ-.யின் பாதுகாப்பின் கீழ் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஷ்கர் இயக்கத்தில் உயர் பதவி வகித்தவரும், அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தவருமான அபு சைபுல்லா பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் மூன்று நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அமீர் ஹம்சாவும் படுகாயம் அடைந்துள்ளது மர்மத்தை அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் தூதரக 2-வது அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு https://ift.tt/2mnuFfX

படம்
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே 4 நாள் போர் நடைபெற்றது. இந்நிலையில் உளவுப் பணியில் ஈடுபட்டதாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை கடந்த 13-ல் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் 24 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. அவர் தனது அந்தஸ்துக்கு ஏற்ற பணியில் ஈடுபடாமல் பிற பணிகளில் ஈடுபட்டதால், அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாக். தூதரக அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகையை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் முக்கிய தலைவர் பசவராஜ் உட்பட 27 நக்சலைட்கள் சுட்டுக் கொலை https://ift.tt/I8mC2tM

படம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நரயன்பூரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ் உட்பட 30 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டாலு மலையில் ஆபரேஷன் பிளாக்பாரஸ்ட் என்ற பெயரில் 21 நாட்கள் மிகப் பெரிய தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி https://ift.tt/Fde6ODo

படம்
கொல்கத்தா: வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு பர்ஹாம்பூர் எம்.பி. யூசுப் பதானுக்கு பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க அனைத்து கட்சி எம்.பி.க்களை உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி சஞ்சய் ஜா உள்ளிட்ட 7 பேரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து  https://ift.tt/PCrdJW3

படம்
புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது’’ என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார்,கே.வி.விஸ்வாதன் அமர்வு விசாரித்து வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு

படம்
புதுடெல்லி: ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல் : மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, முக்கிய நகரங்களில் சுகாதார துறையின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் புதிதாக கரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. ஹாங்காங்கில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க முன்னாள் அதிபர் பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு: விரைவில் குணமடைய மோடி வாழ்த்து https://ift.tt/InLmCiR

படம்
புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புராஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது உலகத் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்த புற்றுநோய் பாதிப்பு ஜோ பைடனின் எலும்புகளுக்கும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் 'யாத்ரி டாக்டர்' பாகிஸ்தான் உளவாளியா? - உளவு துறை தீவிர விசாரணை https://ift.tt/KfFLe8A

படம்
சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் 'யாத்ரி டாக்டரின்' பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உளவாளியாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த யூ டியூபர் பிரியங்கா சேனாபதி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானை விட நரகம் மேலானது: பாலிவுட் கதாசிரியர் ஜாவேத் அக்தர் கருத்து https://ift.tt/gemljDv

படம்
பாகிஸ்தானைவிட நரகம் மேலானது என்று பாலிவுட் கதாசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். சிவசேனா (உத்தவ் அணி) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது அரசியல் பயணம் குறித்து புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாசிரியரும் பாடலாசிரியருமான ஜாவித் அக்தர் (80) பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் முதல் விஸ்டாடோம் ஜங்கிள் சபாரி ரயில்பெட்டி உத்தர பிரதேச அரசு அறிமுகம் https://ift.tt/v4NMGw8

படம்
லக்னோ: உத்தரபிரதேச அரசு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தை துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் நாட்டின் முதல் விஸ்டாடோம் ரயில்பெட்டி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி ரயில் வழியாக ஒரு தனித்துவமான ஜங்கிள் (காட்டு) சபாரி அனுபவத்தை வழங்குவதன் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல் https://ift.tt/zubkGLT

படம்
ஹைதராபாத்: தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்​தில் நேற்று அதி​காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறு​வர்​கள், 5 பெண்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைத​ரா​பாத்​தில் புகழ்​பெற்ற சார்​மி​னார் அருகே குல்​சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்​படு​கிறது. இந்த வளாகத்​தின் தரைதளத்​தில் நகைக் கடைகளும், மேல்​தளங்​களில் வீடு​களும் உள்​ளன. இங்கு நேற்று அதி​காலை 4 மணி அளவில் மின் கசிவு காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரோவின் இஓஎஸ்-09 செயற்கைக்கோள் இரவிலும் பூமியை படம்பிடிக்கும் https://ift.tt/M3oVc9E

படம்
புதுடெல்லி: இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) இன்று செலுத்​தும் செயற்​கைக்​கோள் மூலம் இரவுநேர கண்​காணிப்பு திறன் அதி​கரிக்க உள்​ளது. ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டாவில் உள்ள சதீஷ் தவன் விண்​வெளி மையத்​தில் இருந்து பிஎஸ்​எல்வி ராக்​கெட் மூலம் புதிய ரேடார் செயற்​கைக்​கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்​ணில் செலுத்​தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்​கைக்​கோள் 1,696 கிலோ எடை கொண்​டது. பூமி​யில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்​தில் நிலைநிறுத்​தப்பட உள்​ளது. இஸ்​ரோ​வின் 101-வது ராக்​கெட் இதனை விண்​ணில் செலுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடு பயணம்: முழு விவரம் https://ift.tt/ENHyWzb

படம்
புதுடெல்லி: எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்​ளனர். காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்​திய கொடூர தாக்குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்தான் தீவிர​வா​தி​களுக்கு நேரடி தொடர்பு இருப்​பது தெரியவந்த​து. இதையடுத்​து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு இந்​தியா பதிலடி கொடுத்​தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிர​வா​தி​கள் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. இந்திய படைகள் தனது அதிநவீன ஆயுதங்களின்...

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்; ஆனால் பெயரும் புகழும் கிடைக்கவில்லை: ட்ரம்ப் வேதனை

படம்
இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பொருளாதார உறவை வலுப்படுத்தி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டி வருகிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹாங்காங், சிங்கப்பூரில் வேகமடையும் கரோனா புதிய அலை: சீனாவிலும் பரவுகிறது

படம்
ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி

படம்
அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாக். அணுசக்தி நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு இல்லை: சர்வதேச அணுசக்தி கழகம் தகவல் https://ift.tt/GcsUawL

படம்
புதுடெல்லி: பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் (ஐஏஇஏ) கூறியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜூன் 8-ல் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷு சுக்லா https://ift.tt/Q2npeTD

படம்
புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் ஜூன் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார். உத்தர பிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா (40). இந்திய விமானப்படை விமானியான அவர், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்காக ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் அவர் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்த சூழலில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவரின் 14 கேள்விகள் என்ன? https://ift.tt/5vjzfmN

படம்
புதுடெல்லி: மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முக்கிய தீர்ப்பு வழங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம் https://ift.tt/NlQXVTt

படம்
பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு https://ift.tt/yQXlbAN

படம்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் நேற்று பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான பி.ஆர்.கவாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா - பாக். போரை நிறுத்தியது அமெரிக்கா; இரு நாட்டு vதலைவர்களும் விருந்துக்கு செல்லலாம் - ட்ரம்ப்

படம்
ரியாத்: ‘‘இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், அவர் கூறுவதை எல்லாம் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவுதி அரேபியா சென்றார். அங்கு சவுதி - அமெரிக்க முதலீடு கூட்டமைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் விமான படை தளத்தில் உற்சாகம்: ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் https://ift.tt/9rXp5li

படம்
ஆதம்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில், வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். பஞ்சாபின் ஆதம்பூரில் இந்திய விமான படைத்தளம் உள்ளது. இங்கு எஸ் 400 ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இது மிக் 29 ரக போர் விமானங்களின் படைத்தளம் ஆகும். இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ஆதம்பூர் விமான படைத் தளம் மீது அதிதீவிர தாக்குதல்களை நடத்தினோம். எஸ் 400 ஏவுகணைகளை தகர்த்தோம், மிக் 29 ரக போர் விமானங்களை அழித்தோம் என்று பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாக்குதல் தற்காலிகமாகவே நிறுத்தம்; பாகிஸ்தான் இனியும் அத்துமீறினால் தகுந்த பதிலடி: பிரதமர் மோடி எச்சரிக்கை https://ift.tt/qLy7zCc

படம்
புதுடெல்லி: அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது உளவு அமைப்புகள், விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது லட்சியம் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“தண்ணீரும் ரத்தமும் ஒருசேர பாய முடியாது!” - பிரதமர் மோடி உரையின் தெறிப்புகள் https://ift.tt/ahYdVy0

படம்
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களுக்காக நிகழ்த்திய பிரதமர் மோடி உரையின் முக்கியத் தெறிப்புகள் இங்கே... > “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்க வந்த அப்பாவி குடிமக்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு, அவர்களது குடும்பத்திற்கு முன்னே, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர். இது பயங்கரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயார்: அசாதுதீன் ஓவைஸி கருத்து https://ift.tt/uqCWI3n

படம்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயாராக உள்ளனர் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் உருது பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைஸி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்