இடுகைகள்

Cinema லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்க முன்னாள் அதிபர் பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு: விரைவில் குணமடைய மோடி வாழ்த்து https://ift.tt/InLmCiR

படம்
புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புராஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது உலகத் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்த புற்றுநோய் பாதிப்பு ஜோ பைடனின் எலும்புகளுக்கும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் 'யாத்ரி டாக்டர்' பாகிஸ்தான் உளவாளியா? - உளவு துறை தீவிர விசாரணை https://ift.tt/KfFLe8A

படம்
சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் 'யாத்ரி டாக்டரின்' பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உளவாளியாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த யூ டியூபர் பிரியங்கா சேனாபதி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானை விட நரகம் மேலானது: பாலிவுட் கதாசிரியர் ஜாவேத் அக்தர் கருத்து https://ift.tt/gemljDv

படம்
பாகிஸ்தானைவிட நரகம் மேலானது என்று பாலிவுட் கதாசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். சிவசேனா (உத்தவ் அணி) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது அரசியல் பயணம் குறித்து புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாசிரியரும் பாடலாசிரியருமான ஜாவித் அக்தர் (80) பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் முதல் விஸ்டாடோம் ஜங்கிள் சபாரி ரயில்பெட்டி உத்தர பிரதேச அரசு அறிமுகம் https://ift.tt/v4NMGw8

படம்
லக்னோ: உத்தரபிரதேச அரசு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தை துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் நாட்டின் முதல் விஸ்டாடோம் ரயில்பெட்டி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி ரயில் வழியாக ஒரு தனித்துவமான ஜங்கிள் (காட்டு) சபாரி அனுபவத்தை வழங்குவதன் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல் https://ift.tt/zubkGLT

படம்
ஹைதராபாத்: தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்​தில் நேற்று அதி​காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறு​வர்​கள், 5 பெண்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைத​ரா​பாத்​தில் புகழ்​பெற்ற சார்​மி​னார் அருகே குல்​சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்​படு​கிறது. இந்த வளாகத்​தின் தரைதளத்​தில் நகைக் கடைகளும், மேல்​தளங்​களில் வீடு​களும் உள்​ளன. இங்கு நேற்று அதி​காலை 4 மணி அளவில் மின் கசிவு காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரோவின் இஓஎஸ்-09 செயற்கைக்கோள் இரவிலும் பூமியை படம்பிடிக்கும் https://ift.tt/M3oVc9E

படம்
புதுடெல்லி: இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) இன்று செலுத்​தும் செயற்​கைக்​கோள் மூலம் இரவுநேர கண்​காணிப்பு திறன் அதி​கரிக்க உள்​ளது. ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டாவில் உள்ள சதீஷ் தவன் விண்​வெளி மையத்​தில் இருந்து பிஎஸ்​எல்வி ராக்​கெட் மூலம் புதிய ரேடார் செயற்​கைக்​கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்​ணில் செலுத்​தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்​கைக்​கோள் 1,696 கிலோ எடை கொண்​டது. பூமி​யில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்​தில் நிலைநிறுத்​தப்பட உள்​ளது. இஸ்​ரோ​வின் 101-வது ராக்​கெட் இதனை விண்​ணில் செலுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடு பயணம்: முழு விவரம் https://ift.tt/ENHyWzb

படம்
புதுடெல்லி: எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்​ளனர். காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்​திய கொடூர தாக்குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்தான் தீவிர​வா​தி​களுக்கு நேரடி தொடர்பு இருப்​பது தெரியவந்த​து. இதையடுத்​து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு இந்​தியா பதிலடி கொடுத்​தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிர​வா​தி​கள் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. இந்திய படைகள் தனது அதிநவீன ஆயுதங்களின்...

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்; ஆனால் பெயரும் புகழும் கிடைக்கவில்லை: ட்ரம்ப் வேதனை

படம்
இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பொருளாதார உறவை வலுப்படுத்தி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டி வருகிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹாங்காங், சிங்கப்பூரில் வேகமடையும் கரோனா புதிய அலை: சீனாவிலும் பரவுகிறது

படம்
ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி

படம்
அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாக். அணுசக்தி நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு இல்லை: சர்வதேச அணுசக்தி கழகம் தகவல் https://ift.tt/GcsUawL

படம்
புதுடெல்லி: பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் (ஐஏஇஏ) கூறியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜூன் 8-ல் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷு சுக்லா https://ift.tt/Q2npeTD

படம்
புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் ஜூன் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார். உத்தர பிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா (40). இந்திய விமானப்படை விமானியான அவர், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்காக ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் அவர் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்த சூழலில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவரின் 14 கேள்விகள் என்ன? https://ift.tt/5vjzfmN

படம்
புதுடெல்லி: மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முக்கிய தீர்ப்பு வழங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம் https://ift.tt/NlQXVTt

படம்
பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு https://ift.tt/yQXlbAN

படம்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் நேற்று பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான பி.ஆர்.கவாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா - பாக். போரை நிறுத்தியது அமெரிக்கா; இரு நாட்டு vதலைவர்களும் விருந்துக்கு செல்லலாம் - ட்ரம்ப்

படம்
ரியாத்: ‘‘இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், அவர் கூறுவதை எல்லாம் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவுதி அரேபியா சென்றார். அங்கு சவுதி - அமெரிக்க முதலீடு கூட்டமைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் விமான படை தளத்தில் உற்சாகம்: ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் https://ift.tt/9rXp5li

படம்
ஆதம்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில், வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். பஞ்சாபின் ஆதம்பூரில் இந்திய விமான படைத்தளம் உள்ளது. இங்கு எஸ் 400 ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இது மிக் 29 ரக போர் விமானங்களின் படைத்தளம் ஆகும். இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ஆதம்பூர் விமான படைத் தளம் மீது அதிதீவிர தாக்குதல்களை நடத்தினோம். எஸ் 400 ஏவுகணைகளை தகர்த்தோம், மிக் 29 ரக போர் விமானங்களை அழித்தோம் என்று பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாக்குதல் தற்காலிகமாகவே நிறுத்தம்; பாகிஸ்தான் இனியும் அத்துமீறினால் தகுந்த பதிலடி: பிரதமர் மோடி எச்சரிக்கை https://ift.tt/qLy7zCc

படம்
புதுடெல்லி: அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது உளவு அமைப்புகள், விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது லட்சியம் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“தண்ணீரும் ரத்தமும் ஒருசேர பாய முடியாது!” - பிரதமர் மோடி உரையின் தெறிப்புகள் https://ift.tt/ahYdVy0

படம்
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களுக்காக நிகழ்த்திய பிரதமர் மோடி உரையின் முக்கியத் தெறிப்புகள் இங்கே... > “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்க வந்த அப்பாவி குடிமக்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு, அவர்களது குடும்பத்திற்கு முன்னே, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர். இது பயங்கரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயார்: அசாதுதீன் ஓவைஸி கருத்து https://ift.tt/uqCWI3n

படம்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயாராக உள்ளனர் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் உருது பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைஸி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்