இடுகைகள்

பெங்களூருவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி தொடக்கம் https://ift.tt/52oCVLN

படம்
பெங்களூருவில் 15-வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. அந்த வகையில் 15-வது கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இக்கண்காட்சி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேஜ்ரிவால் ஆடம்பரமாக புதுப்பித்த டெல்லி சீஷ் மகாலில் பாஜக முதல்வர் தங்க மாட்டார்: கட்சி வட்டாரங்கள் தகவல் https://ift.tt/k0e1EQf

படம்
டெல்லியில் பாஜக சார்பில் புதிய முதல்வராக பதவியேற்பவர், முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பயன்படுத்திய ஷீஷ் மகாலில் தங்க மாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 70 உறுப்பினர்களை டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அதிபர் ட்ரம்ப் உத்தரவு

படம்
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "விரைவில் ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போகிறோம். ஏனென்றால் அது எங்களுடையது. அமெரிக்க வளைகுடா ஒரு அழகான பெயர். அது மிகச்சரியாக உள்ளது" என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெற்றோர் குறித்த ‘ஆபாச ஜோக்’ சர்ச்சை - பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு https://ift.tt/aHlFuBK

படம்
யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாக பேசியதாக பிரபல யூடியூபர்கள் ரன்வீர் அலஹாபாடியா , சமய் ரெய்னா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யூடியூபர் சமய் ரெய்னா நடத்தும் பிரபலமான நிகழ்ச்சி ‘இண்டியா’ஸ் காட் லேடன்ட் (India’s Got Latent). இதை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு பிரபல யூடியூபரான ரன்வீர் அலஹாபாடியா அடித்த படு ஆபாசமான கமென்ட் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பியபின் டெல்லி அரசின் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டம் https://ift.tt/6XawCRc

படம்
பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, டெல்லி அரசின் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்காக டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி டெல்லியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகன் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி https://ift.tt/SKmtXOy

படம்
அகமதாபாத்: தொழில​திபரும் அதானி குழும தலைவருமான கவுதம் அதானி​யின் இளைய மகனும் அதானி ஏர்போர்ட்ஸ் இயக்​குநருமான ஜீத் அதானிக்​கும் வைர வர்த்​தகர் ஜெய்​மின் ஷா மகள் திவாவுக்​கும் அகமதாபாத்​தில் கடந்த 7-ம் தேதி திரு​மணம் நடைபெற்​றது. இதில் மணமக்​களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்​றனர். உலக கோடீஸ்​வரர்கள் பட்டியலில் இடம்​பெற்றுள்ள கவுதம் அதானி, தான் கூறியபடி ஜீத் அதானி​யின் திரு​மணத்தை எளிமையான முறை​யில் நடத்தி உள்ளார். இதில் அரசி​யல்​வா​தி​கள், தொழில​திபர்​கள், அரசு உயர் அதிகாரி​கள், திரை நட்சத்​திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்​க​வில்லை. இதன் மூலம் மிகவும் ஆடம்​பரமான முறை​யில் அதானி மகன் திரு​மணம் நடைபெற உள்ளதாக பரவிய வதந்​திக்கு முற்றுப்புள்ளி வைத்​துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹமாஸ் பிடியில் இருந்தபோது அடையாளம் தெரியாமல் உருமாறிய இஸ்ரேலிய பிணைக் கைதிகள்

படம்
ஜெருசலேம்: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதி​யில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்​றது. அப்போது, திடீரென அந்தப் பகுதி​களில் நுழைந்த ஹமாஸ் தீவிர​வா​திகள் 100-க்​கும் மேற்​பட்​ட​வர்களை ஹமாஸ் பிணைக்கை​தி​களாக பிடித்​துச் சென்​றனர். இந்த நிலை​யில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்​புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்​கொள்​ளப்​பட்​டதையடுத்து, இரு தரப்​பிலிருந்​தும் பிணைக் கைதிகள் படிப்​படியாக விடுவிக்​கப்​பட்டு வருகின்​றனர். அதன் ஒரு பகுதி​யாக, சிறைப்​பிடிக்​கப்​பட்டு 500 நாட்​களுக்​குப் பிறகு எல் சாராபி, ஓர் லெவி மற்றும் ஒகத் பென் அமி என்ற மூன்று இஸ்ரேலிய பிணைக்கை​திகளை ஹமாஸ் தீவிர​வா​திகள் நேற்று முன்​தினம் இஸ்ரேலிய அதிகாரி​களிடம் ஒப்படைத்​தனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்​களின் உடல்​நிலை மோசமாக காணப்​பட்​டது. எலும்​பும், தோலுமாக உருமாறிப்போன அவர்களை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்​சி​யும், கோப​மும் அடைந்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்...

அர்விந்த் கேஜ்ரிவால் பணத்தின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்: அன்னா ஹசாரே சொல்வது என்ன? https://ift.tt/pGU56wb

படம்
‘‘ஆம் ஆத்மி கட்சியின் மதுபான கொள்கை, அர்விந்த் கேஜ்ரிவாலை வீழத்தி விட்டது ’’ என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார். இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரேவுடன் நெருக்கமானார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ரலேகான் சித்தி கிராமத்தில், அன்னா ஹசாரேவை அர்விந்த் கேஜ்ரிவால் அடிக்கடி சந்தித்து பேசினார். முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி என்பதால், தனது இயக்கத்தில் முக்கிய நபராக அர்விந்த் கேஜ்ரிவால் செயல்பட அன்னா ஹசாரே அனுமதித்தார். இது அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு திருப்பு முனையாக அமைந்தது. அன்னா ஹசாரே அமைப்பிலிருந்து வெளியேறிய அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் ஆம் ஆத்மி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: அர்விந்த் கேஜ்ரிவால் பேட்டி https://ift.tt/asAtkNw

படம்
புதுடெல்லி: மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. 22 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் கேஜ்ரிவால் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி பேரவை, ஈரோடு கிழக்கில் இன்று வாக்கு எண்ணிக்கை: தேர்தல் முடிவுகள் பிற்பகலில் தெரியும் https://ift.tt/YEKbIXz

படம்
புதுடெல்லி/ ஈரோடு: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் பிற்பகலில் தெரிந்துவிடும். டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. காலை 8 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்