மகன் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி https://ift.tt/SKmtXOy
அகமதாபாத்: தொழிலதிபரும் அதானி குழும தலைவருமான கவுதம் அதானியின் இளைய மகனும் அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநருமான ஜீத் அதானிக்கும் வைர வர்த்தகர் ஜெய்மின் ஷா மகள் திவாவுக்கும் அகமதாபாத்தில் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கவுதம் அதானி, தான் கூறியபடி ஜீத் அதானியின் திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி உள்ளார். இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கவில்லை. இதன் மூலம் மிகவும் ஆடம்பரமான முறையில் அதானி மகன் திருமணம் நடைபெற உள்ளதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக