ஹமாஸ் பிடியில் இருந்தபோது அடையாளம் தெரியாமல் உருமாறிய இஸ்ரேலிய பிணைக் கைதிகள்

ஜெருசலேம்: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதி​யில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்​றது. அப்போது, திடீரென அந்தப் பகுதி​களில் நுழைந்த ஹமாஸ் தீவிர​வா​திகள் 100-க்​கும் மேற்​பட்​ட​வர்களை ஹமாஸ் பிணைக்கை​தி​களாக பிடித்​துச் சென்​றனர். இந்த நிலை​யில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்​புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்​கொள்​ளப்​பட்​டதையடுத்து, இரு தரப்​பிலிருந்​தும் பிணைக் கைதிகள் படிப்​படியாக விடுவிக்​கப்​பட்டு வருகின்​றனர்.

அதன் ஒரு பகுதி​யாக, சிறைப்​பிடிக்​கப்​பட்டு 500 நாட்​களுக்​குப் பிறகு எல் சாராபி, ஓர் லெவி மற்றும் ஒகத் பென் அமி என்ற மூன்று இஸ்ரேலிய பிணைக்கை​திகளை ஹமாஸ் தீவிர​வா​திகள் நேற்று முன்​தினம் இஸ்ரேலிய அதிகாரி​களிடம் ஒப்படைத்​தனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்​களின் உடல்​நிலை மோசமாக காணப்​பட்​டது. எலும்​பும், தோலுமாக உருமாறிப்போன அவர்களை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்​சி​யும், கோப​மும் அடைந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD