பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அக்டோபரில் நடத்தாதீர்கள்: தேர்தல் ஆணையத்துக்கு ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி கடிதம் https://ift.tt/2Xez97M
பிஹாரில் வரும் அக்டோபர் –நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டாம். மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) கடிதம் எழுதியுள்ளது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஆனால், பாஜகவும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து முரண்பட்டு பேசுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக