‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ வாங்க உத்தரபிரதேசத்தில் ரூ.2.5 கோடிக்கு விலை பேசி ஏமாந்த மருத்துவர்: மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸார் https://ift.tt/35LpuZK
அரபு நாட்டு கதைகளில் வரும், ‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ என்று கூறி ரூ.2.5 கோடிக்கு விலை பேசி உத்தர பிரதேசத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதை நம்பி ஏமாந்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீரட் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவீன காலத்தில் நன்கு படித்தவர்களும் ஏமாறும் காலம் தொடர்கிறது. இதில் ஒருவராக உ.பி.யின் மீரட் புறநகரில் வசிக்கும் யுனானி மருத்துவர் லேய்க் அகமது கான் இருந்துள்ளார். இவரை, தம் நோய்வாய்பட்ட தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டி அனீஸ் கான் எனும் இளைஞர் முதல் முறையாக சந்தித்துள்ளார். இதற்காக அனீஸின்வீட்டுக்கு அடிக்கடி சென்ற மருத்துவருக்கு லேய்க்குடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.தனது வீட்டில் அனீஸ் வைத்திருந்த முகலாயர் காலத்து பல்வேறு பழம் பொருட்களை பார்த்த மருத்துவர் லேய்க் அகமது கான், அவற்றில் தனது விருப்பத்தையும் காட்டியுள்ளார். இதை பயன்படுத்திய அனீஸ்,தனது நண்பர் இக்ராமுத்தீனுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, ‘அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறது. அதை தேய்த்து பல கோடி சம்பாதிக்கலாம்’ என்று கூறிஆசை காட்டியுள்ளார். அதன்பின்,அற்புத விளக்கை லேய்க் கான் பார்க்க விரும்பினார். உடனடியாக அதை பார்க்க இக்ராமுத்தீன் வீட்டில் அனீஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக