சீனாவில் முதலீடு, பணப் பரிவர்த்தனை பற்றி பேடிஎம் நிறுவனத்திடம் தீவிர விசாரணை: நாடாளுமன்ற குழு சரமாரி கேள்வி https://ift.tt/3oJVXIz
இந்தியாவைச் சேர்ந்த இணையதள நிதி நிறுவனமான பேடிஎம் சீனாவில் மேற்கொண்ட முதலீடு, பணப் பரிவர்த்தனைகள் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது.
கூகுள், அமேசான், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகும். ஆனால் பேடிஎம் மட்டுமே இந்திய நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் சீனாவில் இருந்து பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் சீனாவுக்கு நிதி திரும்ப அனுப்பப்பட்டது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேடிஎம் நிறுவனத்திடம் நாடாளுமன்ற குழு கேள்வியெழுப்பியது. அத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பந்தய செயலி குறித்தும் கேள்விகள் கேட்டகப்பட்டன. இந்த பந்தய செயலியானது கூகுள் நிறுவனத்தின் விதிகளுக்குப் புறம்பானதாக இருந்ததால் அது நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக