ஐஎம்ஏ நிதிநிறுவன மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம் https://ift.tt/2ViC3H9
ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமதுவை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஐஎம்ஏ நிதி நிறுவனம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது. இவ்வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் முகமது மன்சூர்கான் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை கைது செய்தனர். முன்னாள் ஐஜிபி ஹேமந்த் நிம்பல்கரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக