உள்ளாட்சித் தேர்தலில் போட்டிப் போட்டுக் கொண்டு கேரளாவில் இளம்பெண்களை களம் இறக்கும் அரசியல் கட்சிகள் https://ift.tt/2VisBDV
கேரளாவில் வரும் 8, 10, 14-ம் தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, இளைஞர் அமைப்பான டிஒய்எப்.யை சேர்ந்தோருக்கு அதிகளவில் வாய்ப்பு கிடைத்து வந்தது. இதனால் கேரளத்தில் அடுத்தடுத்த தலைமுறையில் மார்க்சிய சிந்தனையாளர்களும் உருவாகிக் கொண்டிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளும் அதிகளவில் இளம்பெண்களை வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளன. அதனால், கேரளத்தில் சகல கட்சிகளும் அழகிப் போட்டி நடத்துவது போல் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக