சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் https://ift.tt/2Mm143b
லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் தூதரக மற்றும் ராணுவ அளவில் நடந்தபேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சீனப்படைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இது, கடந்த ஜூன் 15-ம்தேதி இரவு இந்திய – சீன வீரர்கள் இடையே கடும் மோதலில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் ராணுவஅளவில் கடைசியாக சுசுல் பகுதியில் கடந்த நவம்பரில் 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக