திருப்பதியில் சமூக வலைதளம் மூலம் மனைவியை விற்க முயன்ற கணவன் கைது https://ift.tt/3aZVnSS
திருப்பதியில் உள்ள தேவஸ்தான கல்லூரி விடுதியில் பணியாற்றுபவர் ரேவந்த் குமார் (29). இவர் தனது தாய், தம்பியுடன் திருப்பதியை அடுத்துள்ள திம்மபாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான மூன்றே நாட்களில் வரதட்சனை கேட்டு மனைவியை ரேவந்த் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அந்தப் பெண், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் மனைவியின் அந்தரங்க படங்களை தனது அலுவலக நண்பர்களின் வாட்ஸ்-அப் குழுவில் ரேவந்த் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் தேவைப்படுவோருக்கு மனைவியை விற்கத் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக