கால்நடை கடத்தல் வழக்கில் 12 பேர் பணியிட மாற்றம்: 3 பிஎஸ்எப் அதிகாரிகள் பணி நீக்கம் https://ift.tt/36qP8Ez
வங்கதேச எல்லையில் கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த 3 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய - வங்கதேச எல்லையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அடிக்கடி மாயமாகி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், பிஎஸ்எப் படையினரே கால்நடை கடத்தலில்ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இந்தியப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளை கடத்தி, அவற்றை வங்கதேசத்துக்கு பிஎஸ்எப் வீரர்கள் சிலர் விற்று வந்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக