பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்: வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தல்; 7 நாட்களில் சென்னை திரும்ப திட்டம் https://ift.tt/3cqvCfd
கரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். மருத்துவர்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், பெங் களூருவிலேயே 7 நாட்கள் தங்கி யிருக்க சசிகலா முடிவெடுத்துள்ள தாக தெரிகிறது. அதன்பின்னர் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப் பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உறவினர்கள் சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக