ஏழை நாடுகளில் வெறும் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை
பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகளில் வெறும் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகளிடையே ஏற்றத் தாழ்வு நிகழ்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகளில் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 82% கரோனா தடுப்பூசிகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பக்கமே உள்ளன” என்று வருத்தம் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக