மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி; கரோனா சிகிச்சை பெற ரூ.5 லட்சம் வரை கடன்: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு https://ift.tt/3i2OKmd
கரோனா மருத்துவ சிகிச்சைக்கு தனி நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப் படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. மாத சம்பளம் பெறுவோர் மற்றும் இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் இத்தகைய கடன் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எவ்வித பிணையும் இல்லாமல் இந்த கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு காரண மாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ள தாகவும், நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக