கரோனா 3-வது அலையைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை https://ift.tt/2UMnpei

நாட்டில் கரோனா வைரஸின் 3-வது அலையைத் தடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும். தடுப்பூசித் திட்டத்தை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் மெல்லக் குறைந்து வருகிறது, கரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. கரோனா பாதிப்பைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக