ஆந்திரா இறால் பண்ணையில் 6 ஒடிசா தொழிலாளர்கள் மர்ம மரணம் https://ift.tt/379BIwv
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், ரேபல்லே மண்டலம், லங்கவாணி திப்பா என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தின் ராயகட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இவர்கள் தங்கியிருந்த அறையில் 4 பேரும், அறைக்கு வெளியே இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இது குறித்து ரேபல்லே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குண்டூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷால் குன்னா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் விஷால் குன்னா கூறும்போது, “இறால் பண்ணையில் வெடிவிபத்து எதுவும் நடைபெறவில்லை. ஒடிசா தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே பிளீச்சிங் பவுடன் கலந்த தண்ணீர் கொட்டிக்கிடக்கிறது. 2 பேர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என கருதப்பட்டாலும் இன்னும் முழுமையாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இது மர்ம மரணமாகவே போலீஸ் கருதுகிறது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக