ஆட்டோ ஏற்றி ஜார்க்கண்ட் நீதிபதி கொலை; உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு: 7 நாளில் தலைமை செயலர் அறிக்கை அளிக்க உத்தரவு https://ift.tt/3fdnHCm
ஜார்க்கண்ட் மாவட்ட நீதிபதியை ஆட்டோ ஏற்றி கொலை செய்த விவகாரத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், ஒரு வார காலத்துக்குள் முழு அறிக்கை அளிக்க மாநில தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்த புதன்கிழமை காலை 5 மணியளவில் நடை பயிற்சி சென்ற போது, ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டார். ஆனால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் இறந்தார் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், திட்டமிட்டு நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக