கரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது: உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை https://ift.tt/3DxbUcD
‘‘கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது. எனினும், அவர்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தாய், தந்தை இருவருமே இறந்ததால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக