பெங்களூருவில் ஒரே பள்ளியில் 60 மாணவிகளுக்கு கரோனா https://ift.tt/39Tuiih
கர்நாடகாவில் கரோனா பரவல் குறைந்ததால், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள சைதன்யா உறைவிட பள்ளியில் கடந்த ஞாயிற்றுகிழமை 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் பள்ளியில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 60 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிந்தது. அவர்கள் உடனடியாக பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு ஊரக மாவட்ட ஆட்சியர் மஞ்சுநாத் கூறும்போது, ‘‘மாணவிகள் ஒரே விடுதியில் தங்கி படித்ததால் எளிதில் தொற்று பரவியுள்ளது. அங்கு கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. தொற்றுக்கு ஆளான மாணவிகளில் 14 பேர் தமிழ்நாட்டையும், 3 பேர் கேரளா வையும் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட பள்ளி 20-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது'' என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக