கோவேக்சின் போட்டு கொண்டவர்கள் வெளிநாடு செல்வதற்காக கோவிஷீல்டு செலுத்த உத்தரவிட முடியாது; மக்களின் உயிருடன் விளையாட கூடாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் https://ift.tt/3CuLwiM
“எந்தவித மருத்துவ தரவுகளையும் ஆராயாமல், கோவேக் சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கு கோவிஷீல்டு தடுப் பூசியை செலுத்த உத்தரவிட முடியாது" என உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு தடுப் பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப் பட்டு வருகின்றன. இதில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கவில்லை. இதன் காரணமாக, இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களை சில நாடுகள் அனுமதிக்க மறுத்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் பயிலும் அல்லது பயில திட்டமிட்டுள்ள மாணவர்கள், வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக