இலவச வீடு திட்டத்தில் விவசாயிக்கு ரூ.14 ஆயிரம் பில் அனுப்பிய ம.பி.அரசு https://ift.tt/3pukLH1
போபால்: மத்திய பிதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் புத்ராம் ஆதிவாசி. ஏழை விவசாயியான இவருக்கு பிரதமரின் இலவச வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் வீடு கட்டித் தரப்பட்டது. இந்த வீட்டின் சாவியை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு அப்போது மாநில ஆளுநர் மங்குபாய் சி. படேல் வந்திருந்தார். அவரும், புத்ராம் ஆதிவாசியிடம் வீட்டுச் சாவியை வழங்கினார்.
ஆனால் இந்த நிகழ்ச்சி முடிந்த சில மாதங்களில் ரூ.14 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று மத்திய பிரதேச அரசிடமிருந்து புத்ராம் ஆதிவாசிக்கு பில் வந்துள்ளது. இதனால் புத்ராம் அதிர்ச்சி அடைந்துள்ளார். முன்னதாக ஆளுநர் இந்த வீட்டுக்கு வருகிறார் என்று வீட்டின் முன்பாக புதிதாக இரும்பு கேட் அமைத்தனர். வீட்டையும் அலங்கரித்தனர். ஆனால் இப்போது கேட் வைப்பதற்கு செலவான வகையில் ரூ.14 ஆயிரம் பில் அனுப்பியுள்ளனர். என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. அந்த இரும்புக் கதவை நிறுவும் போது பணம் செலுத்த வேண்டும் என்று தெரிந்திருந்தால் இரும்புக் கதவை அங்கு வைக்க விட்டிருக்க மாட்டேன் என்று புத்ராம் கூறுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக