ம.பி.யில் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் உள்ளிட்ட 15 காலியிடங்களுக்கு விண்ணப்பித்த 11,000 பட்டதாரிகள்: பி.இ., எம்.பி.ஏ., சட்டம் படித்தோரும் அடக்கம் https://ift.tt/3qvioD5
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் வேலைக்கு பி.இ., எம்பிஏ, சட்டம் படித்த பட்டதாரிகள் உள்பட 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட பட்டதாரிகள் பலரும் விண்ணபித்துள்ளனர்.
இது குறித்து அஜய் பாகெல் கூறுகையில், "நான் அறிவியல் பட்டதாரி. பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். இங்கே முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட இருக்கின்றனர்" என்றார். ஜிதேந்திர மவுரியா சட்டம் பயின்றவர். அவர் கூறுகையில், "நான் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்துள்ளேன். நீதிபதிகள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த வேலை கிடைத்தால் நான் புத்தகம் வாங்கவாவது பயன்படும். அதனால் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன்" என்று கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக