அரக்கோணம் அருகே முகமூடி கொள்ளை வழக்கில் பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது https://ift.tt/3ez9cIy

அரக்கோணம் அருகே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்பட பாணியில் ஏர் கன் மூலம் சுட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துஉள்ளனர். இவர்களிடம் இருந்து ஏர் கன், லேப்டாப், கேமரா உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டில் வசித்து வருபவர் புஷ்கரன்(23). இவரது வீட்டில் கடந்த 17-ம் தேதிநள்ளிரவு முகமூடி அணிந்த கும்பல் கொள்ளையடிக்க கதவைதட்டியுள்ளனர். கதவை திறந்தபோது கொள்ளையர்களை பார்த்த புஷ்கரன், கதவை மீண்டும் மூடியுள்ளார். அப்போது, ஜன்னல் வழியாக கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் புஷ்கரன், அவரது பாட்டி ரஞ்சிதம்மாள் மீது துப்பாக்கி ரவை பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த நேரத்தில் கதவை உடைத்துவீட்டுக்குள் புகுந்த கும்பல் புஷ்கரனை கத்தியால் தாக்கிபீரோவில் இருந்து ரூ.25 ஆயிரம், பெண்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD