இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து: 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு https://ift.tt/3FDWB2u

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் போளூர் வட்டம் சந்த வாசல் அடுத்த கேசவபுரம் அருகே உள்ள ஜலகொண்டாபுரம் கிராமத்தில் வசித்தவர் ராமமூர்த்தி மகன் கார்த்தி(21). இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், பணி முடிந்து ஓரகடத்தில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் இரவு வந்துள்ளார். போளூர் வட்டம் சந்தவாசல் அடுத்த வெல்லூர் கிராமம் குன்றுமேடு பகுதியில் வசித்தவர் முனுசாமி மகன் பாஸ்கர்(28). இவர், சந்தவாசல் அடுத்த ராமநாதபுரம் அருகே உள்ள மேலாண்டபுரம் பகுதியில் வசிக்கும் சங்கரை(38), இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார வைத்து கொண்டு ஆரணி சாலையில் உள்ள நடுகுப்பம் நோக்கி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும், ஆரணி – சந்தவாசல் சாலையில் உள்ள பார்வதி அகரம் என்ற இடத்தில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராமல், இரண்டு பேரது இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கார்த்தி மற்றும் பாஸ்கர் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், உயர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து களம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD