ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் மது ரூ.50: ஆந்திர பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை https://ift.tt/3HpHV7s
ஆந்திரா மாநிலம் அமராவதியில் பாஜக மாநில தலைவர் சோமு வீர்ராஜு தலைமையில் ஜெகன் அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சோமு வீர்ராஜு பேசியதாவது:
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியில், அமராவதியை ஜப்பான், சிங்கப்பூர், சீனா போன்று உருவாக்குவேன் என மக்களை ஏமாற்றினார். தற்போது ஜெகன் ஆட்சியில் ஆந்திராவிற்கு தலைநகரமே இல்லாமல் செய்து விட்டு, விசாகப்பட்டினத்தை தலைநகராக்கி, அதில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வளைக்கலாம் என திட்டம் போட்டுள்ளார். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று கட்சியான பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக