ஆன்லைனில் ரூ.70 லட்சம் பணம் திருடிய வழக்கில் மேச்சேரி பிடிஓ அலுவலக கணினி ஆபரேட்டர் கைது: வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை https://ift.tt/3qEVt8z
காட்பாடி வட்டார வளர்ச்சி அலு வலகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் முறையில் ரூ.70 லட்சம் பணத்தை திருடிய வழக்கில் மேச்சேரி பிடிஓ அலுவலக கணினி ஆபரேட்டரை வேலூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி அளவுக்கு நிதி கையிருப்பில் உள்ளது. இதில், ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானதை கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் அபர்ணா, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக