கர்நாடகாவில் பலாத்கார வழக்கில் இருந்து மடாதிபதி ராகவேஸ்வர பாரதி விடுவிப்பு https://ift.tt/3sNo0eF
கர்நாடகாவில் ராம கதா பாடகியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் மடாதிபதி ராகவேஸ்வர பாரதி நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.
கர்நாடகாவை சேர்ந்த ராம கதா பாடகி ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு ராமச்சந்திரபுர மடத்தின் தலைவர் ராகவேஷ்வர பாரதி தன்னை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு மடாதிபதி ராகவேஸ்வர பாரதி குற்றமற்றவர் என விடுவித்தது. இதை எதிர்த்து ராம கதா பாடகி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஷானந்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்நிலையில் நீதிமன்றம் நேற்று, ''ராகவேஸ்வர பாரதி மீதான பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே பெண் புகார்தாரரின் மனுவும் அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது''எனக்கூறி, அவரை நிரபராதி என விடுவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக