கர்நாடக மாநிலத்தில் தண்ணீருக்காக 30 ஆண்டுகள் பாரம்பரிய முறையில் விடா முயற்சி; மலையில் ஒன்றல்ல இரண்டல்ல... 8 சுரங்கங்கள் தோண்டிய விவசாயி: வறண்ட நிலத்தை பசுஞ்சோலையாக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு https://ift.tt/0g9lsBEHI
கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள அத்யநடுகாவை சேர்ந்தவர் மகாலிங்க நாயக் (77). நிலமற்ற விவசாய தொழிலாளி. இவருக்கு 1978-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நிலச்சுவான்தார் மஹாபால பட், மலை அடிவாரத்தில் 2 ஏக்கர் தரிசு நிலத்தை தானமாக வழங்கினார். நிலத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் கிணறு வெட்ட முயற்சித்தார். பாறைகள் நிறைந்த கரடு முரடான மலைப்பகுதியாக இருந்ததால் கிணறு வெட்ட முடியவில்லை.
அதனால் பாரம்பரிய முறைப்படி மலைமுகட்டுக்கு கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி, தனது நிலத்துக்கு தண்ணீரை கொண்டுவர திட்டமிட்டார். 30 ஆண்டுக்கு முன்பு பகலில் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து சுரங்கம் வெட்டும் வேலையில் ஈடுபட்டார். வறுமை காரணமாக வேலைக்கு யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. இரவு பகலாக 30 மீட்டர் தூரத்துக்கு தனி ஆளாக சுரங்கம் வெட்டிய போதும் தண்ணீர் கிடைக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக