கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவிட்டது உத்தரபிரதேச அரசு https://ift.tt/3H9LiQo
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்தனர். 29 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் மகராஜ்கஞ்ச் பகுதியில் பஹர்பூர் என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை விழா ஒன்று நடந்தது. இதில்கிராம மக்கள் சுமார் 40 பேர் மது அருந்தினர். இவர்களில் வயதான பெண்மணி ஒருவர் உட்பட 9 பேர் நேற்று அதிகாலை உயிரிழந்தனர். 29 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக