சென்னையில் கரோனா வைரஸ் தடுப்பூசி போட அரசு நிவாரணம் தருவதாக ஏமாற்றி வங்கிக் கணக்கை பெற்று மோசடி: விழிப்புடன் இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தல் https://ift.tt/3KJ5uL4
சென்னை: கரோனா தடுப்பூசி போட பதிவு செய்வதாக கூறி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இதிலும் சில நபர்கள் மோசடி செய்து, மக்களிடம் பணத்தை பறித்து வருகின்றனர். அப்பாவி மக்களை குறிவைத்து பணத்தை சுருட்டும் அவர்கள், ‘நாடு முழுவதும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. அவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்படுகிறது. அதைப் பெற, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறி, அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களை பெறுகின்றனர். செல்போனுக்கு வரும் ஓடிபியை (ரகசிய குறியீட்டு எண்) பெற்று, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக