இந்தியர்கள் நாடு திரும்பும் செலவை மத்திய அரசு ஏற்கிறது https://ift.tt/EdnDG6a

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் கீவ் நோக்கி சென்றது. ஆனால் ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைன் தனது வான்வெளியை மூடியதால் அந்த விமானம் பாதி வழியில் திரும்ப நேரிட்டது.

இதையடுத்து உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வழிகளை ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதுகுறித்து ஹங்கேரி, ஸ்லாவேகியா வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசினார். இரு நாடுகளும் மீட்புப் பணிக்கு சம்மதம் தெரிவித்தன. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சென்றடைய வேண்டும். பிறகு அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்கு இந்தியர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என் பதே தற்போதைய திட்டமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD