சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்காததால் மகளின் சடலத்தை 10 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை https://ift.tt/oiLDHSh
சத்தீஸ்கரில் அமரர் ஊர்தி வசதி செய்து தரப்படாததால் 7 வயது மகளின் சடலத்தை அவரது தந்தை10 கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்து சென்றுள்ளார்.
சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டம், லகன்பூர் வட்டம், அம்டாலா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளிஈஸ்வர் தாஸ். அவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மகளைலகன்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். மகளின் சடலத்தை வீட்டுக்குஎடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வசதிசெய்து தருமாறு அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஈஸ்வர்தாஸ் முறையிட்டார். ஆனால் மருத்துவமனை அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததால் மகளின் சடலத்தை தோளில் சுமந்தபடி 10 கி.மீ. தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு நடந்தே சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக