ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்து கொடுக்க கமிஷன் ஆம்பூரில் சிக்கிய கும்பலிடம் 23 ஏடிஎம் கார்டுகள், ரூ.2 லட்சம் பறிமுதல்: சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு https://ift.tt/LkH52xK

ஆம்பூரில் ஏடிஎம் மையங்களில் கமிஷனுக்கு பணம் எடுத்து கொடுக்கும் கும்பலை சேர்ந்த 4 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 23 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரையும் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு பேர் தொடர்ந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆம்பூர் வாத்திமனை பகுதியைச் சேர்ந்த முகமது கான் (32) மற்றும் குபா மசூதி இரண்டாவது தெருவைச் சேர்ந்த சையத் மொய்தீன் (30) என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் 23 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD