ஏப்ரல் 4 முதல் உச்ச நீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை: தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவிப்பு https://ift.tt/Z2RS53K
புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதால் உச்ச நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது.
பிறகு பாதிப்பு சற்று குறைந்ததால் 17 மாதங்களுக்குப் பிறகு சில வழக்குகளை மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் நேரடியாக விசாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 4 முதல்உச்ச நீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணாஅறிவித்துள்ளார். இதனால் 742 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம்அதன் வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்ப உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக