ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் பஹ்ரைன் நன்கொடையாளரை ஆச்சரியப்படுத்திய டிவி நிகழ்ச்சி
கெய்ரோ: பஹ்ரைனைச் சேர்ந்த காலில் அல் டேலாமி கட்டிடக்கலை நிபுணர். ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் இவரது கார் போக்குவரத்து சிக்னலில் நிற்கிறது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தார். உடனடியாக அவரது கார் முன்பு தோன்றிய சிலர், ‘கவனியுங்கள் உங்கள் முன்பு ஒரு ஹீரோ உள்ளார்’ என அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை காண்பிக்கின்றனர். ‘காலில் அல் டேலாமி, உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ எனவும் எழுதப்பட்டிருந்தது.
மேலும் அப்பகுதியில் நின்றிருந்த லாரியில் ‘காலில் அல் டேலாமி ஹீரோ’ என பெரிதாக எழுதப்பட்டிருந்தது. கார் ஜன்னல் ஓரம் நின்றிருந்தவர்கள் டேலாமியின் புகைப்படத்தைக் காண்பித்தனர். ‘நீங்கள் மிகச்சிறந்த மனிதர்’ என கோஷமிட்டனர். இதை எல்லாம் பார்த்த அவர் ஆச்சரியப்படுகிறார். காரிலிருந்து கீழே இறங்கிய அவர், “உங்கள் பாராட்டைப் பெற நான் தகுதியானவன் அல்ல. இதற்கு அல்லா தான் காரணம்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக