மதுரை | ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது https://ift.tt/L9o0MOk
மதுரை: உடன் பணியாற்றிய ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன்(55). அப்பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். சில மாதத்திற்கு முன்பு இந்த பள்ளிக்கு வேறொரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து பணிநிரவல் மூலம் இரண்டு ஆசிரியைகள் மாறுதலாகி வந்தனர். அவர்கள் பள்ளி அலுவல், மாணவர்களுக்கான தேவை தொடர்பாக தலைமை ஆசிரியரை அணுகிய போது, அவர்களிடம் தவறான வகையில் பழக ஜெயசீலன் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதனை இரண்டு ஆசிரியைகளும் கண்டித்து, அவரை எச்சரித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக