தவறான முடிவால் பல்லாவரம் அருகே பரிதாபம்: மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பொறியாளர் - போலீஸார் விசாரணை https://ift.tt/ZPlbkmW
பல்லாவரம் அருகே மனைவியையும் தனது 2 குழந்தைகளையும் கொலை செய்த மென்பொறியாளர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). தரமணியில் ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி காயத்ரி (39). அதேபகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். பொழிச்சலூர் மண்டல பாஜக மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு நித்யஸ்ரீ (13) என்ற மகளும் சாய்கிருஷ்ணா (8) என்ற மகனும் உள்ளனர். மகள் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் மகன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக