அசாமில் தங்கியுள்ள சிவசேனா கட்சியின் 15 எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு கமாண்டோ பாதுகாப்பு: அமித் ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே ரகசிய ஆலோசனை https://ift.tt/N3J5Lub

மும்பை: அசாமில் சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் வீடுகளுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிநடந்து வருகிறது. ‘மகா விகாஸ்அகாடி’ என்ற பெயரில் கூட்டணிஉருவாக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார். காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்துவிலகி, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD