சமாஜ்வாதியின் கோட்டையான ஆஸம்கரில் வெற்றி - பாஜகவில் 3-வது எம்.பி.யான போஜ்புரி மொழி நடிகர் நிரவ்வா https://ift.tt/gWUp9jK
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் பிஹார் மாநிலத்தில் போஜ்புரி மொழி பேசுவோர் அதிகம் உள்ளனர். இதனால், கடந்த 20 ஆண்டுகளாக உ.பி., பிஹாரில் போஜ்புரி மொழி திரைப்படங்கள் வெளியாகி பிரபலமாகி வருகின்றன.
போஜ்புரி கதாநாயகர்களுக்கும் மக்களிடம் செல்வாக்கு கூடி வருகிறது. அதனால், அவர்களை தேர்தல்களில் நிற்க வைத்து பாஜக பலனடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நடந்து முடிந்த உ.பி.யின் கிழக்கு பகுதியிலுள்ள ஆஸம்கர் தொகுதியின் மக்களவை இடைத்தேர்தலில் போஜ்புரி நடிகர் நிரவ்வா எனும் தினேஷ்லால் யாதவ் வென்றுள்ளார். இவர் பாஜக சார்பில் மக்களவையில் நுழையும் 3-வது எம்.பி.யாவார். இவருக்கு முன் டெல்லி வடகிழக்கு தொகுதியில் போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரியும், உ.பி.யின் கோரக்பூரில் போஜ்புரி நடிகர் ரவி கிஷணும் எம்.பி.யாகி உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக