நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த அமலாக்கத் துறை https://ift.tt/G9D0cKo
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாட்கள் விசாரித்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 2-ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததால் ஆஜராக முடியவில்லை. இதையடுத்து அவரை ஜூன் 23-ம்தேதி (இன்று) ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக