விருத்தாச்சலம் அருகே ஐம்பொன் சிலைகள் மீட்பு; இருவர் கைது: மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸார் நடவடிக்கை https://ift.tt/xvABSMN
மதுரை: விருத்தாச்சலம் அருகே ரூ. 2 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை கடத்தி விற்க முயன்ற இருவரை மதுரை சிலைகடத்தல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில் மாரியம்மன், பெருமாள் ஆகிய ஐம்பொன்னால் ஆன இரண்டு சாமி சிலைகளை சிலர் பதுக்கி வைத்து விற்க முயற்சிப்பதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில், ஆய்வாளர் பிரேமா சாந்தகுமாரி, உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், முருகபூபதி, பாண்டியராஜன், சிறப்பு எஸ்ஐக்கள் செல்வராஜ், சந்தனகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக