மேற்கு வங்கத்தில் ரூ.48 லட்சத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கைது https://ift.tt/GwaRn7t
ஹவுரா: மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் ரூ.48 லட்சம் பணத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் விசால் கொங்காரி ஆகிய மூன்று பேரும் , மேற்குவங்கத்தில் உள்ள ஹவுராவுக்கு காரில் சென்றனர். காரில் அதிகளவு பணம் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ராணிஹாதி என்ற இடத்தில் போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர்.அப்போது ஜார்க்கண்ட் எம்எல்ஏ.,க்கள் வந்த வாகனத்தில் ரூ.48 லட்சம்பணம் இருந்தது. இவ்வளவு பணம்எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்ற கேள்விக்கு, எம்.எல்.ஏ.க்கள் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக