இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜொமோட்டோவின் 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' திட்டம் - இனி இந்தியாவின் மற்ற நகர உணவுகளையும் ஆர்டர் செய்யலாம் https://ift.tt/5vLwZDo

படம்
சென்னை : ஜொமோட்டோ, புதிதாக 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' (Intercity legends) என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது. அதாவது, கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையில் இருந்தே ஆர்டர் செய்து பெற முடியும். இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து ஸ்பெஷல் உணவுகளை மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சமாக ஒரு நாளுக்குள் உணவு டெலிவரி செய்யப்படும். பெரும்பாலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை டெலிவரி செய்யப்படும் என்று ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள்... இது இந்தியா அல்ல” - அமெரிக்காவில் இந்தியரை இனரீதியாக தாக்கிய மற்றொரு இந்தியர்

படம்
கலிபோர்னியா : அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மற்றொரு இந்தியர் ஒருவரால் இனரீதியான தாக்குதலை எதிர்கொண்டுள்ளார். சில தினங்கள் முன் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் "அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்" என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல மற்றொரு இனவெறி சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பணத்தின் மீதான மோகமே காரணம்” | சுகேஷின் குற்றங்களை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பழகினார் - அமலாக்கத்துறை https://ift.tt/rXdyQLI

படம்
புதுடெல்லி : சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் | பதவியேற்ற 15 நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிங் https://ift.tt/cQZkJg7

படம்
பாட்னா : பிஹாரில் பதவியேற்ற 15 நாளில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங். பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த மாதம் 10-ம் தேதி பொறுப்பேற்றனர். இதன்பின் கடந்தமாதம் 16ம் தேதி பிஹார் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 31 அமைச்சர்கள் பதவியேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண் அஞ்சலி அப்பாதுரை போட்டி

படம்
விக்டோரியா : கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார். வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 10 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி நாளை கேரளா வருகை https://ift.tt/uJvh1pR

படம்
புதுடெல்லி / பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1, 2் தேதிகளில் கேரளா, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானை கட்டமைக்க ரூ.80 ஆயிரம் கோடி தேவை - திட்ட அமைச்சர் அசன் இக்பால் தகவல்

படம்
இஸ்லாமாபாத் : மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய ரூ.80 ஆயிரம் கோடி தேவை என்று அந்நாட்டு திட்ட அமைச்சர் அசன் இக்பால் கூறியுள்ளார். பாகிஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்தசில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்நாட்டு மக்கள் தொகையில் 15% பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பயிர்கள் மூழ்கியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீன கம்யூனிஸ்ட் மாநாட்டையொட்டி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா ஊரடங்கு தீவிரம்

படம்
பெய்ஜிங் : சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங்நகரத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேற்று மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டனர். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் மிக தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட் | வீட்டு சிறை; இரும்பு கம்பியால் தாக்குதல் - 8 வருடமாக பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பாஜக பிரமுகர் நீக்கம் https://ift.tt/l8CzGv4

படம்
ராஞ்சி : வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு வருடமாக சித்ரவதை செய்த பாஜகவைச் சேர்ந்த நபர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தான் தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்றா பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சூடான பாத்திரங்களை கொண்டும், இரும்பு கம்பிகளை கொண்டும் பணிப்பெண்ணை சீமா பத்ரா தாக்கியுள்ளார். இரும்பு கம்பி கொண்டு தாக்கி சுனிதாவின் பற்கள் உடைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ரிசார்ட் அரசியலில்” ஜார்க்கண்ட் | சத்தீஸ்கர் அழைத்துச் செல்லப்பட்ட ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் https://ift.tt/LMSJBj9

படம்
ராய்பூர் : ஜார்க்கண்டின் ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரிய அரசியல் நெருக்கடியின் காரணமாக, எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சியான பாஜக பக்கம் போகாமல் இருக்க, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் ராய்பூரில் உள்ள மேஃபேர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானில் கிலோ தக்காளி ரூ.500, வெங்காயம் ரூ.400 - இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்

படம்
லாகூர் : பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் விற்கப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பருவநிலை மாறுபாடு காரணமாக அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழை காரணமாக இதுவரை 1,128 பேர் உயிரிழந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. 3 லட்சம் வீடுகள் இடிந்துள்ளன. 3,000 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 200-க்கும் மேற்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. சுமார் 4 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழையால் இதுவரை ரூ.7.98 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத்ம விருதுக்கு பரிந்துரைக்க செப். 15-ம் தேதி கடைசி நாள் https://ift.tt/Ib0cEq6

படம்
புதுடெல்லி : பத்ம விருதுகளுக்கு பெயர்கள் பரிந்துரை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் விருது வழங்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் 2.52 லட்சம் https://ift.tt/hygM71K

படம்
புதுடெல்லி : நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 2.52 லட்சம் வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் (ஆக.27 நிலவரப்படி) மேலாக நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். நீதிபதிகளின் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதை கருத்தில்கொண்டு, தனது 16 மாத பணிக்காலத்தில் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்தார். இருப்பினும், தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விகிதத்தில் அந்த நியமனம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதும், தன் பாலின உறவுகளால் குடும்ப அமைப்பு பல வடிவங்கள் பெற வாய்ப்பு - உச்ச நீதிமன்றம் https://ift.tt/1lM8cIE

படம்
புதுடெல்லி : திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப உறவின் வடிவங்கள் மாற்றம் பெற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஒரு வழக்கில் குடும்ப உறவுகள் என்றால் என்ன? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான மற்றும் முக்கியமான கருத்துகளை தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு ஆகஸ்ட் 28-ல் தான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவில் இணைந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் - தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு அதிர்ச்சி https://ift.tt/d5Ne7O6

படம்
ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாஜகவில் இணைந்தனர். இது ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் வரும் 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தொடர்ந்து 3-வது முறையும் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை நடத்த ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்காக தெலங்கானா முதல்வரும், டிஆர்எஸ் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் மும்முரமாக பணியாற்றி வருகிறார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக டிஆர்எஸ் கட்சியின் ஆட்சி மீது உள்ள குறைபாடுகளை பாஜக எடுத்துக்கூறி, கடந்த 2 முறை நடந்த இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திரா: ஆலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு https://ift.tt/RDoi41E

படம்
காக்கிநாடா : ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், வாகலபூடி பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றிக்கொண்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.பின்னர் தகவல் அறிந்து போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். இதே தொழிற் சாலையில் கடந்த 19-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரே மாதத்தில் 2-ம் முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எனது கடைசிப் போராட்டமாக இருக்கும்” - மம்தா பானர்ஜி https://ift.tt/v9Vzaqs

படம்
கொல்கத்தா : 2024ல் மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதுதான் எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மம்தா, "2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டமே எனது கடைசிப் போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். எப்படியும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்கத்தை காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை மிரட்ட முயற்சித்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“எங்கள் எம்.எல்.ஏ.க்கள் நேர்மையானவர்கள்” - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கேஜ்ரிவால் https://ift.tt/zLw5Nda

படம்
புதுடெல்லி : "பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் திட்டம் டெல்லியில் தோல்வியுறும்" என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மது விற்பனைக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, பாஜக - ஆம் ஆத்மி கட்சி இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரம்: டாடா புராஜக்ட்ஸ் சி.இ.ஓ. தகவல் https://ift.tt/1CGrkpd

படம்
புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதன்மை கட்டமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநர் வினயக் பய் நேற்று தெரிவித்தா். இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறியதாவது. இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பெரியஅரசியலமைப்பு மண்டபத்தை டாடா உருவாக்கி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வறை, நூலகம், ஆலோசனைஅறை, உணவகம், பரந்த வாகனநிறுத்துமிடம் உள்ளிட்ட பல வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு https://ift.tt/UCPJR8W

படம்
புஜ்: குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி நடந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் புஜ் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மோடி அதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது. இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் குஜராத் மாநிலத்தின் பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடைபெற்றது. மேலும், இந்த மாநிலத்துக்கு வரும் முதலீடுகளை நிறுத்தவும் பலமுறை முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அதையெல்லாம் கடந்து குஜராத் மாநிலம் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் விடுதி அறைகளில் கிரிக்கெட் பார்ப்பதற்கு தடை: ஸ்ரீநகர் என்ஐடி உத்தரவு https://ift.tt/CNTQjLe

படம்
ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைப் பார்க்க நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியை விடுதி அறையில் டி.வி.யில் கும்பலாக பார்க்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்ஐடி) அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் https://ift.tt/7miC4j6

படம்
புதுடெல்லி: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது. சிறு குலுங்கல் கூட இல்லாமல் ரயில் சென்றதால், தண்ணீர் நிரப்பப் பட்டிருந்த கிளாஸில் இருந்து ஒரு சொட்டு கூட கீழே சிந்தவில்லை. அந்த அளவுக்கு இதன் பயணம் சொகுசாக உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேகரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்தரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் https://ift.tt/hFzmrXI

படம்
புதுடெல்லி: உலகம் முழுவதும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே சிறு தானிய உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 92-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விதிகளை மீறி கட்டப்பட்ட 32 மாடி நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் 9 விநாடிகளில் தரைமட்டமானது https://ift.tt/5qGLNc9

படம்
புதுடெல்லி: விதிகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் நேற்று 9 விநாடிகளில் தரைமட்டமானது. உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தர்மாவட்டத்தில் நொய்டா அமைந்துள்ளது. டெல்லிக்கு அருகே அமைந்துள்ள இப்பகுதி அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.நொய்டாவின் ஏடிஎஸ் கிராமத்தில் எமரால்டு கோர்ட்என்ற திட்டத்தின் கீழ் அபெக்ஸ் (32 மாடி), சேயன் (29 மாடி) என 2 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டன. இவற்றில் 857 வீடுகள் இருந்தன. இதில் 600 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இந்த இருகுடியிருப்புகளும் இரட்டை கோபுர கட்டிடம் என்று அழைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

"2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதியளிக்கிறேன்" - பிரதமர் மோடி https://ift.tt/OWLKPBX

படம்
புஜ்: வரும் 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தனது சொந்த மாநிலமான கட்ச் மாவட்டத்திற்கு வருகை தந்த போது அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2001 வாக்கில் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சர் பகுதியில் இரண்டு நினைவகங்களை அர்பணித்துள்ளார் அவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6-வது நபர் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு https://ift.tt/4iZHQAS

படம்
புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலையில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 2021 ஏப்ரல் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப் பேற்றார். அவர் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவிகள் வெளிநாடு செல்ல ஆப்கன் தலிபான்கள் தடை

படம்
காபுல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து படிப்பதற்காக வெளிநாடு செல்ல பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்தது. தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசு செப்டம்பர் மாதம் பதவியேற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்ய ஐ.நா. குழு முயற்சி

படம்
கீவ் : ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைய உக்ரைன் முடிவு எடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ள ஜபோரிஷ்ஜியாவில் உள்ளது. இதன் அருகே உக்ரைனின் ஆயுத கிடங்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக மடாதிபதி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு https://ift.tt/DN8wqXx

படம்
பெங்களூரு : கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஸ்ரீமுருக ராஜேந்திராமடம் மிகவும் பிரபலமானது. அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு சென்று மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணருவிடம் லிங்க தீட்சை பெற்றார். இந்நிலையில் மடத்தின் சார்பில் நடத்தப்பட்ட விடுதியில் தங்கிப் படித்த 16 வயதான 2 சிறுமிகள் அங்கிருந்து வெளியேறி மைசூருவில் உள்ள சேவா சம்ஸ்தேவில் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடந்த 26-ல் தஞ்சம் அடைந்தனர். தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரிடம், மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு உட்பட 3 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முறையிட்டனர். இதையடுத்து சேவா சம்ஸ்தே நிறுவனத்தினர் 2 சிறுமிகளையும் மைசூரு மாவட்ட குழந்தைகள் காப்பக குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது https://ift.tt/YLS8Xf6

படம்
சென்னை : சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதிநீக்கப் பிரச்சினை - ஜேஎம்எம், காங். எம்எல்ஏக்களை பாதுகாக்க தீவிர முயற்சி https://ift.tt/Ls32Orv

படம்
ராஞ்சி : முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கப் பிரச்சினையால் ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்களைப் பாதுகாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 2019-ம் ஆண்டில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பில்கிஸ் பானு வழக்கு | “உச்ச நீதிமன்றத்தை நாங்கள் நம்புகிறோம்” - 134 முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் https://ift.tt/Op6wxlU

படம்
புதுடெல்லி : பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து 134 முன்னாள் அரசு அதிகாரிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், டெல்லி முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் சிவசங்கர் மேனன், சுஜாதா சிங், முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை உள்ளிட்ட 134 முன்னாள் அரசு அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பி கொள்ளக்கூடாது - 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவு https://ift.tt/rb6Rj8Z

படம்
புதுடெல்லி : இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவை என்பதால் தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேரலையில் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளால் அந்த தேசம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுவதாகவும், எனவே வாக்காளர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்படும் இதுபோன்ற தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாவகாசமாக காப்பி குடித்த போலீஸார் - கருச்சிதைவான பெண் கைதிக்கு ரூ.3.83 கோடி இழப்பீடு தர உத்தரவு

படம்
லாஸ் ஏஞ்சல்ஸ் : சிகிச்சை தர தாமதம் ஏற்பட்டதால் கருச்சிதைவு ஏற்பட்ட பெண் கைதிக்கு ரூ.3.83 கோடி இழப்பீடு தருமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் 34 வயதான சான்ட்ரா குயினான்ஸ். இவர் செய்த குற்றத்துக்காக கடந்த 2016-ல் ஆரஞ்ச் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். சிறையில் இருந்தபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாசி நிதி நிறுவன மோசடி | இருவருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை, ரூ171.74 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/BFQon2c

படம்
கோவை : பாசி நிதி நிறுவனத்தின் ரூ.930 கோடி மோசடி வழக்கில், உரிமையாளர்கள் இருவருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.171.74 கோடி அபராதம் விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது. திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் | ராகுல் மீது குற்றச்சாட்டு; சோனியாவுக்கு பாராட்டு https://ift.tt/py1JXBV

படம்
புதுடெல்லி : காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் (73), அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக, முதிர்ச்சியின்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பிறகு கட்சித் தலைமை பொறுப்பை சோனியா காந்தி ஏற்றார். எனினும், ராகுல் காந்தியே நிழல் தலைவராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘விரைவில் புதிய கட்சி’’ - குலாம் நபி ஆசாத் அறிவிப்பு https://ift.tt/LGRPuoT

படம்
புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அடையாள முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணத்தை விலகி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வரலாற்றில் இல்லாத அளவு மழைப்பொழிவு - 937 பேர் உயிரிழப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனம்

படம்
கராச்சி : பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, ஜூன் 14 முதல் நேற்றுவரை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்நாட்டில் 343 குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்துள்ளனர். சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 306 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மில்லியன் பேர் தங்குமிடங்களை இழந்து தவித்துவருகின்றனர். இதனால், பாகிஸ்தான் அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. பலுசிஸ்தானில் 234 இறப்புகளும், கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் முறையே 185 மற்றும் 165 இறப்புகளும் பதிவாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரின் உரியில் என்கவுன்ட்டர் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு https://ift.tt/mbaHEfx

படம்
ஸ்ரீநகர் : வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கமல்கோட் என்ற இடத்துக்கு அருகே 3 தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் மீது ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இங்கு கடந்த 72 மணி நேரத்தில் போதை பொருள் கடத்தல் முயற்சியும் நடந்தது. அதையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் விவகாரம் | ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக முதல்முறை இந்தியா வாக்களிப்பு

படம்
வாஷிங்டன் : உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதன் முறையாக வாக்களித்தது. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரியில் தாக்குதலை தொடங்கியது. இதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான தீர்மான விவகாரங்களில் இந்தியா ஒதுங்கியே இருந்தது. இந்த நிலையில், தற்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராயப்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது https://ift.tt/36Zg4yw

படம்
சென்னை: ராயப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலை, துலுக்கானம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (41). ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 22-ம் தேதி இரவு 11.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகில் நிறுத்திவைத்து விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வாகனத்தை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை - உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் https://ift.tt/uxD32Xf

படம்
புதுடெல்லி : தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு அமைப்புகள் உளவு பார்ப்பதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டில் அரசியல் புயலை கிளப்பியது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் எல்லையில் கைதான பாக்., தீவிரவாதி: ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள் https://ift.tt/39GMFf7

படம்
காஷ்மீர் : ஜம்மு எல்லை அருகில் பிடிபட்ட தீவிரவாதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் ரத்தம் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். காஷ்மீரில் நேற்றுமுன்தினம் 72 மணி நேரத்தில் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. மேலும் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். ரஜோரி மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற அவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இந்த நபர் ஏற்கெனவே ஒருமுறை எல்லையில் ஊடுருவிய போது மனிதாபிமான அடிப்படையில் அவரை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தனர். ஆனால் அதே நபர் தற்போது மீண்டும் ஊடுருவல் முயற்சியில் சிக்கியுள்ளார். விசாரணையில் அவர், பாகிஸ்தான் ராணுவ கர்னல் ஒருவர் எனக்கு 30,000 பணம் கொடுத்தார். இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துமாறு கூறினார் என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரங்க ஒதுக்கீடு ஊழல் | தேர்தல் ஆணைய பரிந்துரையால் பதவி இழக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்? https://ift.tt/Rtw38H9

படம்
ராஞ்சி : ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அம்மாநில புதிய முதல்வராக ஹேமந்த்தின் மனைவி கல்பனா சோரன் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாவர்க்கர் ரத யாத்திரையால் பதற்றம் - கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு https://ift.tt/YEtsQr5

படம்
பெங்களூரு : கர்நாடகாவில் சுதந்தின தினத்தன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, சாவர்க்கரின் படம் இடம் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டது. ஷிமோகா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் சாவர்க்கரின் படம் கிழிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்ட‌து. இந்நிலையில் பாஜக சார்பில் 23‍-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மைசூருவில் சாவர்க்கர் ரத யாத்திரையை முன்னாள் முதல்வர் எடியூரப்பா காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சாவர்க்கர் படத்தால் அலங்கரிங்கப்பட்ட வாகனம் சாம்ராஜ்நகர், குடகு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் தலைவர் பதவி | ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு - தேசிய செயற்குழு கூட்டத்தில் தேர்தல் முடிவு? https://ift.tt/kuBIAzx

படம்
புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார். அவர் டெல்லி திரும்புவதற்கு முன் உடல்நலம் சரியில்லாத தனது தாயாரை சென்று பார்த்து வருவார். சோனியாவுடன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்கின்றனர்” என்று கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பையில் உறியடி நிகழ்ச்சியில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு https://ift.tt/Jzv5qjA

படம்
மும்பை : மும்பையில் உறியடி நிகழ்ச்சியில் மனித கோபுரத்தில் இருந்து தவறிவிழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உறியடி நிகழ்ச்சி நடத்துவது நாட்டில் வழக்கமாக உள்ளது. மகாராஷ்டிராவில் ‘தகி ஹண்டி’ என்ற பெயரில் உறியடி விழா கொண்டாடப்படுகிறது. அதிக உயரத்தில் உறியில் கட்டப்பட்டுள்ள பானையை உடைப்பதற்காக இளைஞர்கள் மனித கோபுரம் அமைத்து மேலே செல்வார்கள். இந்நிலையில் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த உறியடி விழா ஒன்றில் சந்தேஷ் தல்வி (24) என்ற இளைஞர் மனித கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தார். ‘சிவ சம்போ கோவிந்த பதக்’ என்ற குழுவை சேர்ந்த சந்தேஷ் தல்விக்கு இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு உயர் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் ஒடிசாவில் மாணவர்களை நூலகத்தில் பூட்டி வைத்த பள்ளி https://ift.tt/4vaoxSi

படம்
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் சிலமாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. கட்டணம் செலுத்தாத 3 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 34 மாணவர்களை கடந்த 22-ம் தேதி பள்ளி நிர்வாகம் நூலகத்தில் வைத்து பூட்டியதாகக் கூறப்படுகிறது. காலை 9.30 முதல் மதியம் 2.30 மணி வரை மாணவர்கள் அறைக்குள்ளேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ), துணை முதல்வர் மற்றும் நிர்வாக மேலாளர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக இந்திய தண்டனை சட்டத்தின் 342, சிறார் நீதி சட்டத்தின் 75-வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்காதது ஏன்? - கர்நாடக முதல்வர் பசவராஜ் கேள்வி https://ift.tt/W46VPdT

படம்
பெங்களூரு : கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் ஊழல் குறித்து லோக் ஆயுக்தாவிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் கெம்பண்ணா கூறுகையில், ''கர்நாடக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் அரசின் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்கின்றனர். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினேன். அவர் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த பெலகாவியை சேர்ந்த‌ ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை கொண்டார். அவரது புகாரின் எதிரொலியாக ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் நேரத்து இலவச வழக்கு | நீதிபதி சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் - தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு https://ift.tt/sIBNnAM

படம்
புதுடெல்லி : தேர்தல் நேரத்து இலவசங்களைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதால் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுகிறோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்