ஆந்திரா: ஆலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு https://ift.tt/RDoi41E
காக்கிநாடா: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், வாகலபூடி பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
ஆலையில் நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றிக்கொண்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.பின்னர் தகவல் அறிந்து போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். இதே தொழிற் சாலையில் கடந்த 19-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரே மாதத்தில் 2-ம் முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக