கூடுவாஞ்சேரி அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் பெண் கைது https://ift.tt/veoWmaX

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். லாரி வைத்து மண், மணல் வியாபாரம் செய்து வந்தார். மேலும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக இருந்து வந்தார்.‌

இவரை கடந்த 21-ம் தேதி செல்வி நகர் அருகே மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போஸீஸார் விசாரணை நடத்தினர். இதில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக உறவினர் என்றும் பாராமல் செந்தில்குமாரை கொல்ல சென்னை வளசரவாக்கம் கற்பகம் அவன்யூ பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் கூலிப்படையை ஏவியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் குமார் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD