பிரிட்டனுக்கு புதிய விடியல்... ராஜாவை விட இரண்டு மடங்கு பணக்காரர் - ரிஷி சுனக் நியமனத்துக்கு இங்கிலாந்து ஊடகங்களின் ரியாக்சன்
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம் தேதி அறிவித்ததை அடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மன்னரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றார். அப்போது, நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்கை, மன்னர் மூன்றாம் சார்லஸ் நியமித்தார்.
பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளதற்கு இங்கிலாந்து ஊடகங்கள் சில வரவேற்றுள்ளன. சில எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. இங்கிலாந்தில் உள்ள அனைத்து முக்கிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்திலும் ரிஷி குறித்தே செய்திகள் இடம்பெற்றிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக