ம.பி. நிதி நிறுவனத்தில் 16 கிலோ தங்கம் கொள்ளை https://ift.tt/FLYHv6Q
ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் கட்னி நகர காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.கே. ஜெயின் கூறியதாவது.
கட்னியின் பார்கவான் பகுதியில் தங்கத்தை அடமானம் பெற்று கடன் வழங்கும் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவன கிளைக்குள் காலை 10.30 மணியளவில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள், ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி லாக்கர்களை திறந்து 16 கிலோ தங்க நகைகள் மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக