கட்சி மாற எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 100 கோடி பேரம் - வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/gUzsuiw
ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியிலிருந்து பாஜகவிற்கு மாற ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ. 100 கோடி வீதம் 4 எம்.எல்.ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்ற தெலங்கானா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய, நந்தகுமார், ராமச்சந்திரபாரதி மற்றும் சிம்ஹயாஜி ஆகியோர் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தலா ரூ. 100 கோடி வழங்குவதாக பேரம் பேசியதாக, பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏவான ரோஹித் ரெட்டி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா அரசு உத்தரவிட்டதின்பேரில் இவ்வழக்கை சிறப்பு விசாரணை குழு நடத்தி வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக